மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றவர் நித்யா மேனன். தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது தனுஷுடன் இட்லி கடை திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் இதற்கு முன்னதாக தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், "பலரும் ஒரு சாதாரண பெண்ணிடம் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படி நடிகைகளிடம் நடந்துகொள்வதில்லை. நடிகை என்றால் ஈஸியாக தொட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் ஒரு விழாவுக்கு போனால் ரசிகர்கள் கையை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இந்த கேள்வியை சாதாரண பெண்ணிடம் யாருமே கேட்கமாட்டார்கள். ஆனால் நடிகைகள் சாதாரணமாக கேட்கிறார்கள். ஈஸியாக தொட்டுவிட நாங்கள் என்ன பொம்மையா?" என்றார். அவரது இந்தப் பேட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு இருக்கிறது.













0 Comments
No Comments Here ..