04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

சிவகார்த்தி கேயனின் அடுத்தடுத்த திட்டங்கள்: வெங்கட்..

மாதரசி மற்றும் பராசக்தி என இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில் முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது.


அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பராசத்தி வெளிவரும் என்பதுபோல் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.


சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. அதற்காக தான் கோட் படத்தில் கூட கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்கின்றனர்.


ஆனால், கோட் படத்தின் ரிலீசுக்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்பது போல் கூறப்பட்ட நிலையில், இவர்கள் கூட்டணியில் படம் உருவாவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது என்கின்றனர்.


இந்த நிலையில், இப்படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் ஒரு கதாநாயகி என்றும், டிராகன் படத்தின் மூலம் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ள நடிகை கயாடு லோஹர் மற்றொரு ஹீரோயின் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.


கயாடு லோஹரிடம் படக்குழு பேச்சுவார்த்தை லெவெலில் தான் இருக்கிறார்களாம். விரைவில் படம் குறித்து அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது




சிவகார்த்தி கேயனின் அடுத்தடுத்த திட்டங்கள்: வெங்கட்..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு