ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து பின் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனரான அட்லீ. அப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்கள் இயக்கினார்.
இந்த படங்களின் வெற்றி மூலம் அட்லீ பாலிவுட் பக்கம் சென்று தனது 5வது படத்தை ஷாருக்கானை வைத்து இயக்கினார். ஷாருக்கான், நயன்தாரா நடிக்க வெளியான இப்படம் ரூ. 1000 கோடி வசூல் வேட்டை நடத்தியது.
தற்போது அட்லீ ஜவான் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அந்த படத்திற்காக அட்லீ தற்போது முதற்கட்ட பணிகளை செய்து வருகிறாராம்.
சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், இப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை வீடியோ மூலம் அறிவித்தனர். இந்த வீடியோவில் கதை குறித்த அனிமேஷன் ஓவியங்கள் காட்டப்படுகின்றன.
அதில், ஓநாய், டிராகன்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதனால், இப்படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி கதையாக விஎஃப்எக்ஸ் பணிகளால் நிறைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது













0 Comments
No Comments Here ..