தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்தச் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'அறிந்தும் அறியாமலும்', 'சர்வம்', 'நான் கடவுள்', 'ஆரம்பம்', 'மதராசப்பட்டினம்', 'சார்பட்டா பரம்பரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமான ஆர்யா, நடிப்பில் பிசியாக இருந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தையும் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை இலுள்ள ஆர்யாவின் வீட்டில் நடைபெறும் இந்தச் சோதனை, திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













0 Comments
No Comments Here ..