அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை உடனடியாக ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா கூடுதல் வரி விதித்ததற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்துள்ளார். கனடாவின் இந்தச் செயல் "அப்பட்டமான விதிமீறல்" என்று அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல், வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் பல்வேறு அதிரடி மற்றும் கெடுபிடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனது அண்டை நாடுகளில் ஒன்றான கனடாவுடனும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கடும் நெருக்கடியைக் கொடுத்து வந்தார்.
இந்த திடீர் அறிவிப்பு, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் மேலும் பதட்டத்தை உருவாக்க வாய்ப்புள்ளது.
0 Comments
No Comments Here ..