23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கைக்குள் வரும் கொரோனா நோயாளிகளை அடையாளம் காண்பதற்கும் நோய் பரவுவதனை தடுப்பதற்கும் சுகாதார அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் விமான நிலையத்தின் ஊழியர்கள், விமான நிலையத்திற்கு செல்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய சுகாதார நடவடிக்கை தொடர்பான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் வாழும் பிரதேச மக்களுக்கு இந்த நோய் பரவும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சமூக வலைத்தளங்களில் பரவும் போலித் தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1010 பேர் உயிரிழந்துள்ளனர். 43000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு