15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

கொரோனா பாதிப்புக்கு ஆளான மாணவி 2 நாளில் வீடு திரும்புவார்- கேரள சுகாதாரத்துறை

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவ-மாணவிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

திருச்சூர் மாணவி ஒருவர் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான முதல் மாணவி ஆவார். திருச்சூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி தனிவார்டில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதுபோல ஆலப்புழா, காசர்கோடு மாணவ-மாணவிகளும் அந்தந்த மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

இவர்களின் ரத்தம், சளி ஆகியவை புனேவில் உள்ள மத்திய ரத்த மாதிரி சோதனைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சிகிச்சைக்குப்பின் அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து 5 முறை இவர்களின் ரத்த மாதிரிகள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டது. இதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது.

ரத்த மாதிரி சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருப்பதை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். என்றாலும் அவர்கள் மாணவிகளுக்கு மேலும் சில சிகிச்சைகள் அளித்தனர்.

அதன் பிறகு 6-வது முறையாக அவர்களின் ரத்தம், சளி சேகரிக்கப்பட்டு இறுதிக்கட்ட சோதனைக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான திருச்சூரைச் சேர்ந்த மாணவி உள்பட 2 பேரின் ரத்த மாதிரி புனேவுக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டது. முதல் 5 சோதனையில் கொரோனா வைரஸ் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

6-வது பரிசோதனை முடிவுகள் இன்று அல்லது நாளை வரும் என எதிர்பார்க்கிறோம். அந்த முடிவும் கொரோனா வைரஸ் இல்லை என்று வந்தால் மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.

கேரளா முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதற்காக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடர் என்றும் அறிவித்தோம்.

இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்து விட்டது. நோயால் பாதிப்புக்கு ஆளானவர்கள் குணமாகி வருகிறார்கள். திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 7 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே மாநில பேரிடர் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே. சைலஜாவும் கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




கொரோனா பாதிப்புக்கு ஆளான மாணவி 2 நாளில் வீடு திரும்புவார்- கேரள சுகாதாரத்துறை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு