தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணிவெற்றி பெற்றது.
தென்னாபிரிக்காவின் Durban மைதானத்தில் நேற்று இரவு இந்த போட்டி நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பாக, பென் ஸ்டோக்ஸ் 47 ஓட்டங்களையும், ஜேஸன் ரோய் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்
தென்னாபிரிக்க அணி சார்பில் லுங்கி எங்கிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
205 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
தென்னாபிரிக்க அணி சார்பாக, குயிண்டன் டீ கொக் 65 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்த நிலையில், ஆட்ட நாயகனாக மொயின் அலி தெரிவு செய்யப்பட்டார்.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் 1 க்கு 1 என சமநிலையில் உள்ளது.
இதேவேளை, தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..