03,Dec 2024 (Tue)
  
CH
விளையாட்டு

உலக கோப்பை பயிற்சி ஆட்டம் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி வெற்றி

7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இன்று இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் மோதியது.

டாஸ் ஜெயித்த அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்து வீச்சில் இந்திய வீராங்கனைகள் திணறினார்கள். ஷாபிலி வர்மா 12 ரன்னிலும், மந்தானா 4 ரன்னிலும், ரோட்ரியஸ் 9 ரன்னிலும், கேப்டன் கவுர் 11 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது.

இதனையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி களமிறங்கியது. கிர்பி 42 ரன்னிலும், கேப்டன் டெய்லர் 16 ரன்னிலும் அவுட் ஆயினர். கடைசியாக மேத்யூஸ், ஹென்றி ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். கடைசி 6 பந்தில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்திய அணியின் பூனம் யாதவின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய பெண்கள் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




உலக கோப்பை பயிற்சி ஆட்டம் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி வெற்றி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு