10,Mar 2026 (Tue)
  
CH
விளையாட்டு

இங்லீஷ் பிரீமியர் லீக்: செல்சியா அணியை பந்தாடியது மன்செஸ்டர் யுனைடெட் அணி!

இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் செல்சியா அணிக்கெதிரான லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

ஸ்டாம்போர்ட் பிட்ஜ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடின.

எனினும், இதில் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருந்தது.

இதற்கமைய இப்போட்டியின் 45ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணி, முதல் கோலை புகுத்தி அரங்கில் குழுமியிருந்த இரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த கோலினை அந்தோணி மார்டியல் அடித்து அணியை வலுப்படுத்தினார்.

இதனையடுத்து, செல்சியா அணி பதில் கோல் போடுவதற்கு கடுமையாக போராடியது. எனினும் அது பலனளிக்கவில்லை. இதனால் முற்பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைடெட் அணி, முன்னிலைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் செல்சியா அணி பதில் கோல் போடுவதற்கு தீவிரமாக செயற்பட்டது. எனினும், அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

இரண்டாவது பாதியிலும் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் வீரர்கள் அபாரமா விளையாட்டினை வெளிப்படுத்தினர்.

இதன்படி, போட்டியின் 66ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் வீரரான ஹரி மாகுவேர் அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.

இந்த அற்புதமான கோலின் துணையுடன் மன்செஸ்டர் யுனைடெட் அணி, 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

மன்செஸ்டர் யுனைடெட் அணியின் அபார ஆட்டத்திற்கு இடையில் திகைத்து நின்ற செல்சியா அணி, பதில் கோல் போடுவதற்கு கடுமையாக போராடியது. எனினும் அதற்கு மன்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் வழிவிடவில்லை.

மேற்கொண்டு இரு அணிகள் போராடியும் கோல் அடிக்க முடியாததால் போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் மன்செஸ்டர் யுனைடெட் அணி, வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மன்செஸ்டர் யுனைடெட் அணி, புள்ளிபட்டியலில் 38 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த செல்சியா அணி 41 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.





இங்லீஷ் பிரீமியர் லீக்: செல்சியா அணியை பந்தாடியது மன்செஸ்டர் யுனைடெட் அணி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு