13,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து விட்டதா?

கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியிருக்கிறது. உலக நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி உள்ளது. வைரல் பதிவுகளில், "கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் மருந்தை இந்தியா கண்டுபிடித்து விட்டது. நோயாளி விரைந்து குணமடைந்து வருகிறார்" எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

வைரல் பதிவுகளில் உள்ள செய்தி தொகுப்பில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறும் தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரல் பதிவுகளை பகிர்ந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகி விட்டது.

இணைய தேடல்களின் போது தவறான தலைப்பில், பல்வேறு செய்தி தொகுப்புகள் காணக்கிடைத்தன. எனினும், எந்த தொகுப்பிலும், இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக குறிப்பிடவில்லை. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மருந்தை கண்டுபிடிக்கவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.





கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து விட்டதா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு