திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த நஸ்ரியா திடீரென்று தனது முடிவை மாற்றிக்கொண்டு டிரான்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் அவரது கணவர் பகத் பாசிலுடன் இணைந்து நடிக்கிறார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து நஸ்ரியாவிடம் கேட்டபோது,'கல்யாணத்துக்கு பிறகு ஒரேயொரு படத்தில்தான் நடித்தேன். தற்போது பகத் பாசிலுடன் இணைந்து டிரான்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். நடிப்பதை நிறுத்தியது ஏன் என்று கேட்கிறார்கள். நடிப்பதை நிறுத்திவிட்டதாக யாரிடமும் நான் சொல்லவில்லை. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன்' என்றார்.
சினிமா
0 Comments
No Comments Here ..