13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடி ரோஸ் டெய்லர் புதிய சாதனை

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர். இந்தியாவுக்கு எதிராக இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி அவருக்கு 100-வது டெஸ்ட் ஆகும். 100-வது டெஸ்டில் விளையாடிய 4-வது நியூசிலாந்து வீரர் ஆவார். வெட்டோரி 112 டெஸ்டிலும், ஸ்டீபன் பிளமிங் 111 போட்டியிலும், பிரெண்டன் மெக்கல்லம் 101 டெஸ்டிலும் விளையாடி உள்ளனர்.

டெய்லர் ஏற்கனவே ஒருநாள் போட்டியிலும், 20 ஓவரிலும் 100 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இதன் மூலம் 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) 100 ஆட்டத்தில் விளையாடிய உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகின் வேறு எந்த கிரிக்கெட் வீரரும் 3 வடிவிலான போட்டிகளில் 100 ஆட்டத்தை தொட்டது இல்லை.

35 வயதான டெய்லர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவரில் 100-வது ஆட்டத்தில் விளையாடினார். தற்போது 100-வது டெஸ்டிலும் இந்தியாவுக்கு எதிராக ஆடினார்.

டெய்லர் 100 டெஸ்டில் 7174 ரன்னும் (19 சதம், 33 அரை சதம்) 231 ஒருநாள் போட்டியில் 870 ரன்னும் (21 சதம், 51 அரை சதம்), நூறாவது 20 ஓவர் ஆட்டத்தில் 1909 ரன்னும் (7 அரை சதம்) எடுத்துள்ளார்.




மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடி ரோஸ் டெய்லர் புதிய சாதனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு