10,May 2024 (Fri)
  
CH
சினிமா

மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறாது எனவும், அதற்கு பதிலாக கோவையில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படத்தை எதிர்வரும் ஏப்பரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், காதலர் தின விருந்தாக குட்டிக்கதை பாடல் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இதனிடையே மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பா.ஜ.கவின் போராட்டம் மற்றும், வருமான வரித்துறையினரின் சோதனைகள் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு