13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

இலங்கைத் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் இருபதுக்கு இருபது அணி அறிவிப்பு!

இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு இருபது தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு இருபது அணியினை சகலதுறை வீரர் கிரண் பொல்லார்ட் வழிநடத்தவுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி சகலதுறை வீரரான 31 வயதுடைய அண்ட்ரூ ரசல் கடந்த உலகக்கிண்ண தொடரின் போது உபாதை காரணமாக இடைநடுவில் வெளியேறியிருந்தார்.

அதன் பின்னர் உபாதையிலிருந்து மீண்டாலும் கூட அவரால் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற முடியவில்லை.

இந்நிலையில் அண்மையில் நிறைவுக்குவந்த பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் பிரகாசித்ததன் மூலம் தற்போது மிக நீண்ட இடைவெளியின் பின்னர் மேற்கிந்திய தீவுகள் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான இருபருக்கு இருபது சர்வதேச தொடரின் போது உபாதைக்குள்ளான பந்துவீச்சு சகலதுறை வீரர் பெபியன் அலன் உபாதையிலிருந்து குணமடைந்து ஒருநாள் குழாமில் இடம்பெற்றதுடன் தற்போது டி20 குழாமிலும் இடம்பெற்றுள்ளார்.

அத்துடன் அதே தொடரில் உபாதைக்குள்ளாகி, உபாதையிலிருந்து குணமடைந்து மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள ஷேய் ஹோப் தற்போது மேற்கிந்திய தீவுகள் டி20 குழாமிற்கும் திரும்பியுள்ளார்.

உடற்தகுதி பிரச்சினை காரணமாக இலங்கை அணியுடனான ஒருநாள் தொடருக்கான குழாமில் தவறவிடப்பட்ட இளம் துடுப்பாட்ட வீரர் ஹெட்மெயர் தற்போது உடற்தகுதி தேர்வில் சித்தியடைந்து இலங்கை அணியுடனான டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்றுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இறுதியாக அயர்லாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடியிருந்தது.

அண்ட்ரூ ரசல், ஒஷேன் தோமஸ், பெபியன் அலன் மற்றும் ஷேய் ஹோப் ஆகியோரின் மீள்வருகையினால் குறித்த அயர்லாந்து தொடரில் விளையாடிய எவின் லூவிஸ், கெரி பியர், ஷேர்பைன் ருதர்போர்ட் மற்றும் ரொமாரியோ ஷேபர்ட் ஆகிய வீரர்கள் டி20 குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

400 இற்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சகலதுறை வீரர் டுவைன் பிராவே தொடர்ந்தும் மேற்கிந்திய தீவுகள் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் ஒருநாள் குழாமில் இடம்பெறாத வேகப்பந்துவீச்சாளர் கெஷ்ரிக் வில்லியம்ஸ் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான லெண்டில் சிம்மண்ஸ் ஆகியோர் டி20 குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டி20 சர்வதேச போட்டியானது மார்ச் 4 மற்றும் 6ஆம் திகதிகள் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

இதற்கமைய அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில்,

கிரண் பொல்லார்ட், பெபியன் அலன், டுவைன் ப்ராவோ, ஷெல்டன் கொட்ரல், ஷிம்ரொன் ஹெட்மெயர், ஷேய் ஹோப், ப்ரெண்டன் கிங், நிக்கொலஸ் பூரண், ரொவ்மன் பவல், அண்ட்ரூ ரசல், லெண்டில் சிம்மண்ஸ், ஒஷேன் தோமஸ், ஹெய்டன் வோல்ஸ், கெஷ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.





இலங்கைத் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் இருபதுக்கு இருபது அணி அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு