13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது நியுசிலாந்து!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி 10 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணியின் தலைவர் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பின்னர் 183 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் ஆரம்பமானது. போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் நியூசிலாந்து அணியை விட இரண்டாவது இன்னிங்சில் வெறும் 8 ஓட்டங்கள் மாத்திரமே இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது.

சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் சவுதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 9 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 1.4 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளும் மோதும் இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது நியுசிலாந்து!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு