23,Nov 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

அடுத்த ஆண்டு சந்திரயான்-3 திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

நிலவில் ஆய்வு நடத்துவதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்திரயான்-2 ராக்கெட், விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், சந்திரயான்-3 திட்டம், அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறியதாவது:-

சந்திரயான்-2 திட்டத்தில் பெற்ற பாடங்கள் அடிப்படையில், சந்திரயான்-3 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் முதல் பாதியில், இது விண்ணில் ஏவப்படும். இத்திட்டத்தில் சற்று தாமதம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை பொறுத்தவரை, புவிஈர்ப்பு விசை தொடர்பான 4 உயிரியல், 2 இயற்பியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விண்வெளிக்கு அனுப்ப தேர்வாகி உள்ள 4 விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி தொடங்கி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.




அடுத்த ஆண்டு சந்திரயான்-3 திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு