22,May 2025 (Thu)
  
CH
இந்திய செய்தி

வௌிநாட்டில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பிற்கு அழைத்து வருவதை கண்டித்து போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் இன்று (10) ஈடுபட்டனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு மாணவர்கள், வித்தியாலய நுழைவாயிலை மூடியவாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ´வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம்´, ´கொண்டு வராதே கொண்டு வராதே கொரோனாவை எங்கள் பிரதேசத்திற்கு கொண்டு வராதே´, ´இனரீதியாக அழிக்கும் முயற்சியை நிறுத்து - சிறுபான்மை மக்களை இலக்கு வைக்காதே´, ´எமது மாகாணத்தை அழிக்க நேசிக்கும் சதியை நிறுத்து - மக்களை காப்பாற்று´ என்பன பல வாசகங்கள் ஏந்தியாவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அத்தோடு ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலயத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமை காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக தடைப்பட்டு காணப்பட்டதுடன், ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயம் மற்றும் ஜெயந்தியாய அஹமட் கிறாஸ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் மாத்திரம் சமூகமளித்திருந்தனர்.

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்களில் முதற்கட்டமாக ஒரு குழுவினர் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இவர்களை மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கவுள்ள நிலையில் பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்தினை கொரோனா மத்திய நிலையமாக மாற்றி அங்கு தங்க வைக்கப்பட்டு தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது




வௌிநாட்டில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பிற்கு அழைத்து வருவதை கண்டித்து போராட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு