10,Jun 2026 (Wed)
  
CH
இந்திய செய்தி

கொரோனா பாதிப்பினால் இந்தியாவில் இரண்டுபேர் உயிரிழப்பு

கொரோனா வைரசுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்த அவரது மகன் மூலம் கொரானா பாதிப்புக்கு ஆளான மூதாட்டி, டெல்லி ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து இந்திய திரும்பிய கர்நாடக மாநிலம் குல்பர்கி பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர் முகமது உசேன், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி ஆய்வுகள் மூலம் அவர் கொரோனா பாதிப்பால் தான் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.




கொரோனா பாதிப்பினால் இந்தியாவில் இரண்டுபேர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library '/usr/lib/php/20151012/php_curl.dll' - /usr/lib/php/20151012/php_curl.dll: cannot open shared object file: No such file or directory

Filename: Unknown

Line Number: 0

Backtrace: