இந்தியாவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக (இந்தியாவில் வாழும் வெளிநாட்டவர்களையும் சேர்த்து) (மார்ச் 15ஆம் தேதி மதியம் 12 மணிவரை) உயர்ந்துள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரானில் இருந்து 236 இந்தியர்கள் ராஜஸ்தானின் ஜெய்சல்மீருக்கு அழைத்து வரப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறுகிறார். இரானிலிருந்து வந்த அனைவரும் இந்திய ராணுவ சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவிலிருந்து துபாய் புறப்பட்ட துபாய் பவுன்ட் எமிரேட்ஸ் விமானத்திலிருந்த இங்கிலாந்து பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதே விமானத்திலிருந்த 289 பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேவில் மட்டும் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மகாராஷ்டிர முழுவதும் திரையரங்கங்கள், வர்த்தக மையங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் சுகாதாரத் துறையினர் அந்நகரம் முழுவதும் சோடியம் தெளித்து வருகின்றனர்.
ஆந்திராவின் திருப்பதி கோயிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் மேற்கொள்ளும் வழிமுறையை நிறுத்தி உள்ளனர். மாறாக வெவ்வேறு நேரத்தில் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறாது என அம்மாநில கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..