16,May 2024 (Thu)
  
CH
சினிமா

பிக்பாஸ் 4-யை இவர் தான் தொகுத்து வழங்க போகிறாராம்! யார் அந்த பிரபலம் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிந்துவிட்டது. நான்காவது சீசனுக்காக பலர் காத்திருக்கிறார்கள். முந்தைய சீசன்களை போன்றே 4வது சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார்.

4வது சீசனில் யார், யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர். 

இந்நிலையில் சிலரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று வெளியாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.

நடிகை ரம்யா பாண்டியன், நிகழ்ச்சி தொகுப்பாளினி ஷிவாங்கி, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை, நடிகைகள் சுனைனா, அம்ரிதா, அதுல்யா ரவி, கிரண் ரத்தோட் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

ஒவ்வொரு சீசன் துவங்கும் முன்பும் அவர் கலந்து கொள்கிறார், இவர் பங்கேற்கிறார் என்று ஒரு பட்டியல் வலம் வருவதும் இறுதியில் அது பொய்யாவதும் வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டு வெளியாகியுள்ள பட்டியலாவது உண்மையாகுமா என்று பார்ப்போம்.

மேலும் இந்த சீசனில் யார் கலந்து கொள்ள வாய்ப்பு அதிகம் என்று பார்வையாளர்களும் கணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக 4வது சீசனை சிம்பு தொகுத்து வழங்குவார் என்று வதந்தி பரவியது. சிம்பு இல்லை கமல் தான் தொகுத்து வழங்குகிறார் என்பது தெரிந்துவிட்டது.

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதம் துவங்கும். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது அதற்கு பின்னர் தான் துவங்கும் என்று கூறப்படுகிறது.





பிக்பாஸ் 4-யை இவர் தான் தொகுத்து வழங்க போகிறாராம்! யார் அந்த பிரபலம் தெரியுமா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு