13,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

கொரோனாவின் பாதிப்பு

கொரோனாவின் பாதிப்பு உலகளவில் 36 லட்சத்து 44 ஆயிரத்து 822ஆக அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 52 ஆயிரத்து 366 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 11 லட்சத்து 94 ஆயிரத்து 842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிரிழப்புகள், அரசு எடுக்கும் நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு, ஊரடங்கு தளர்வு, மது பான கடைகள் திறக்கப்படும் என வந்துள்ள அறிவிப்பு, அதற்கு எழுந்துள்ள ஆதரவு, எதிர்ப்பு ஆகியவை குறித்து உடனுக்குடன் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வசந்த உற்சவ விழா ரத்து செய்யப்படுபதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து நாமக்கல் திரும்பிய 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது முடக்க உத்தரவை மீறியதாக தமிழ்நாட்டில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 344 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கொரோனா பரவலின் மையமாக விளங்கும் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வியாழன் முதல் தற்காலிக காய்கறி சந்தை திருமழிசையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை நயினார் குளம் காய்கறி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் பிரதமரின் ஊக்கத் தொகையைப் பெறாத விவசாயிகள் வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் மீன் சந்தை 41 நாள்களுக்குப் பின் இன்று திறக்கப்பட்டது. ஆனால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் வரத்து இல்லாததால் 2 லோடு மீன்கள் தேக்கமடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று (மே 5) ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3023 இல் இருந்து 3550 ஆக அதிகரித்துள்ளது.

சமீப நாள்களாக பிசிஆர் சோதனை அதிகரித்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் 12,773 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 1409ஆக இருக்கிறது.

கொரோனா பாதிப்பால் நேற்று மேலும் ஒருவர் பலியாகியதால் இதுவரை சிகிச்சை பலனின்றி பலியானோரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

கடலூரில் 122 பேர், சென்னையில் 266 பேர், விழுப்புரத்தில் 49 பேர், பெரம்பலூரில் 22 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. மேலும் மதுரை, திண்டுக்கல் என 19 மாவட்டங்களில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.




கொரோனாவின் பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு