06,May 2024 (Mon)
  
CH
சினிமா

விஜய் 65 ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. 


விஜய் - சன் பிக்சர்ஸ் - நெல்சன் கூட்டணி புதிதாக உருவாகியுள்ளதால் இதுகுறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.


இந்நிலையில் தளபதி 65 எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இதுகுறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மனோஜ் பரமஹம்சா. அவர் கூறியதாவது:


மாநிலத்தில் அனைவராலும் விரைவில் நாடு முழுக்கவும் விரும்பப்படும் அற்புதமான மனிதருடன் மீண்டும் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நண்பன் படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளேன். அந்த நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். தளபதி 65 இந்திய அளவிலான படமாக இருக்கும். தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். 


ஈரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நண்பன் போன்ற படங்களுக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 




விஜய் 65 ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு