நித்தியானந்தா அறிக்கை
புதுடெல்லி ஏப்ரல் 22 கோவிட் தொற்றின் பாதிப்புகள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, குறிப்பிட்ட நாடுகளில் திறக்கப்பட்டுள்ள கைலாசா ஆன்மீக தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்படுமெனவும், பொதுமக்கள் வருகைதர அனுமதி அளிக்கபடாது எனவும், சர்ச்சைக்குரிய நம்ம சாமியார் நித்தியானந்தாசுவாமிகள் அறிக்கைவெளியிட்டுள்ளார். ஏப்ரல் 19 ஆம் தேதியிட்ட அந்த அறிக்கையின்படி பிரேசில், ஜரோப்பியாஒன்றியம், மலேசியா, இந்தியா, ஆகிய நாடுகளில் கைலாசாவின் தூதரகங்கள் செயல்படுவதாக குறிப்பிடப்படுட்டுள்ளன. பலாவேறுபட்ட சர்ச்சைகள் கிசுகிசுக்களில் சிக்குபவரானா நம்ம சாமியார் நித்தியானந்தாசுவாமிகள் இந்தியாவில் இருந்து வெளியேறி தனதுபக்தர்களுக்கு கைலாசா என்ற பெயரில் தனித்தீவை உருவாக்கியதாக கூறப்படுகின்றது. எனினும் அத்தீவு இருக்குமிடம் ரகசியமாகவே இருக்கும் பட்சத்தில் அவ்வப்போது காணொலிகளையும் அறிக்கைகளையும் அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார்.
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
0 Comments
No Comments Here ..