06,Apr 2025 (Sun)
  
CH
இந்திய செய்தி

இப்படி பொதுமக்களின் வயிற்றில் அடிக்கலாமா?

சென்னையில் 'ரெமிடிசிவிர்' மருந்தின் விலை, ரூ.14,000க்கு கருப்பு சந்தையில் விற்கப்படும் அவலம் தெரியவந்துள்ளது.


என்னத்த சொல்வது.. இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக, தினம் தினம் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சரி மக்கள் பாதிக்கப்பட்டாலும், சிகிச்சை கொடுத்து மீட்கலாம் என்று நினைத்தால், ஆக்சிஜன் பற்றாக்குறை மூச்சு முட்ட வைக்கிறது. அதேபோல், கொரோனா தாக்கம் கடுமையாக உள்ளவர்களுக்கு போடப்படும் 'ரெமிடிசிவிர்' மருந்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஒவ்வொன்றும் தலா 14,000 இந்த நிலையில், சென்னையில் கள்ள சந்தை வாயிலாக மருந்து விற்பனையாளர்கள் 'ரெமிடிசிவிர்' மருந்தின் 100ம்க் குப்பிகளை ரூ.14,000க்கு விற்பனை செய்வதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து மயிலாப்பூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் கூறுகையில், 'சென்னையில் நாங்கள் ஆறு 'ரெமிடிசிவிர்' குப்பிகளை வாங்கினோம். அது ஒவ்வொன்றும் தலா ரூ.14,000" என்றார்.

கடும் தட்டுப்பாடு கருப்பு சந்தையில் ஆர்டர் செய்த 2 நாட்களில் ரெமிடிசிவிர் மருந்து டெலிவர் செய்யப்பட்டுள்ளது. ரூ.900 முதல் அதிகபட்சமாக ரூ.4,800 வரை நார்மலாக கிடைக்கும் இந்த மருந்தின் தட்டுப்பாடு காரணமாக கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக விலை கொடுத்து சிலர் மருந்தும் வாங்கியுள்ளனர்.


அதுவும் விலை 6,500 அதேபோல், சென்னையில் ஒருவர் ஆறு வெவ்வேறு மருந்து விற்பனையாளர்களிடம் ரெமிடிசிவிர் மருந்தை கோரியிருக்கிறார். அதில், நான்கு விற்பனையாளர்கள் மருந்து இல்லை என்று கூற, இருவர் மட்டும் ஒரு குப்பிக்கு ரூ.6,500 டிமாண்ட் செய்திருக்கின்றனர். அதுவும், மருத்துவமனை ஆவணங்கள், கொரோனா உறுதி செய்யப்பட்ட சான்று, ஆதார் கார்டு விவரம் போன்றவை எல்லாம் சமர்ப்பித்தால் தான் மருந்து கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

7 பேர் கைது இதுகுறித்து மருந்து கட்டுப்பாடு நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரெமிடிசிவர் குறித்து இதுவரை பொதுமக்களிடம் இருந்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. டீலர்களின் லைசன்ஸ் உறுதி செய்த பிறகே, அவர்களிடம் ரெமிடிசிவிர் மருந்து விற்பனைக்கு தரப்படுகிறது" என்றார். புகார் வரவில்லை என்று தமிழகம் சொல்லும் அதே வேளையில், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், கருப்பு சந்தையில் மருந்து விற்றதற்காக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.




இப்படி பொதுமக்களின் வயிற்றில் அடிக்கலாமா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு