28,Apr 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

சிங்கபூர், சவுதிஅரேபியா இரு நாடுகளும் இந்தியாவுக்கு உதவி

சிங்கப்பூரில் இருந்து 4 கொள்கலன்களில் கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


 சிங்கப்பூரில் இருந்து டாடா கம்பனிகளால் நன்கொடையாக வழங்கப்பட்ட கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் 4 கொள்கலன்களின் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


 இந்தியாவின் அதிக அளவிலான ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய சிங்கப்பூரில் இருந்து இன்று இந்தியாவிற்கு 4 கிரையோஜெனிக் O2 வருகை தந்தது. 


 இந்த பரிமாற்றத்தை எளிதாக்க சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சிங்கப்பூரில் பல ஏஜென்சிகள் இதற்கு உதவியாக இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது. 


 இந்திய தூதரகம் அதானி குழுமம் மற்றும் M/s லிண்டேவுடன் இணைந்து 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு அனுப்புவதில் பெருமிதம் கொள்கிறது என்றும்,


 சவுதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்தின் அனைத்து உதவி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு எங்கள் நன்றி என்று சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 மேலும் அதானி குழும தலைவர் கௌதம் அதானி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,


 மேலும் 5000 ஐஎஸ்ஓ கிரையோஜெனிக் திரவ ஆக்ஸிஜன் தொட்டிகளை சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக நாங்கள் பாதுகாத்து வருகிறோம். இவையும் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படும். இதுதொடர்பாக எங்களுக்கு உதவிய சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் டாக்டர் ஆசாஃப் சயீத்துக்கு நன்றி கூறுகிறேன் என்று கௌதம் அதானி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


@குவைத் தமிழ் சோசியல் மீடியா




சிங்கபூர், சவுதிஅரேபியா இரு நாடுகளும் இந்தியாவுக்கு உதவி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு