12,May 2024 (Sun)
  
CH
சினிமா

குக்வித்கோமாளி அஸ்வின் நடிக்கும் படங்கள்

விஜய் டிவி ஷோக்களில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் அஸ்வின். சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி இறுதி சுற்றில் கனி டைட்டிலை வென்றார். இரண்டாம் இடத்தை ஷகீலா பிடித்தார்.


இந்த நிகழ்ச்சி மூலம் அதிகம் புகழ்பெற்றவர்கள் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ர லட்சுமி, சிவாங்கி, புகழ், பாலா ஆகியோர். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் இவர்களுக்கு பல வாய்ப்புக்கள் தேடி வருகின்றன.


அப்படி அஸ்வின் நடித்து சமீபத்தில் வெளிவந்த குட்டி பட்டாஸ் என்ற சிங்கிள் வீடியோ பாடல், மிகவும் பிரபலமாகி, இணையத்தில் வைரலானது. இளைஞர்கள் பலரின் மனம் கவர்ந்த பாடலாக இந்த பாடல் மாறி உள்ளது. இந்த பாடலுக்கு பலரும் நடனம் ஆடி, அதை வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, வைரலாக்கி உள்ளனர்.



இதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு சிங்கிள் வீடியோ பாடலில் அஸ்வின் நடிக்க உள்ளார். லோனர் என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த தகவலை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


லோனர் சிங்கிள் பாடலின் போஸ்டருடன் அஸ்வின் பதிவிட்டுள்ள கேப்ஷனில், நமக்காக நம்ம மட்டும் தான் இருப்போம். இது தனியானவர்களுக்கான பாடல் என குறிப்பிட்டுள்ளார். அஸ்வினின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. வைரலாகி வரும் இந்த பதிவை இதுவரை சுமார் 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.


அஸ்வின் தற்போது கவுரவம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


அறிமுக இயக்குனரான ஹரி இயக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அஸ்வினுடன், குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார். இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.




குக்வித்கோமாளி அஸ்வின் நடிக்கும் படங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு