22,Aug 2025 (Fri)
  
CH
இந்திய செய்தி

சீமானை தொடர்ந்து தற்போது ஹரி நாடாரை பஞ்சாயத்தில் இழுத்துவிட்டுள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி.

கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார். நகைகளுடன் ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர்.


இவர் ‘பனங்காட்டுப் படை’ எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். சமீபத்தில் கூட இவர் விமான நிலையம் சென்ற போது வருமான வரித்துறையினர் வளைத்து பிடித்து நகைகள் குறித்து விசாரித்த போது 1 கோடியே 52 லட்ச ரூபாய்யை முன்கூட்டியே கட்டி மிரளவைத்தார் ஹரி நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதே போல தற்போது இவர் சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். 2க் அழகானது காதல் என்ற படத்தை தயாரித்து வரும் ஹரி நாடார், அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். ஹரி அவருக்கு ஜோடியாக வனிதா நடிக்க இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் ஹரி நாடார் பற்றி புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார் விஜயலக்ஷ்மி. நடிகை விஜயலக்ஷ்மி, சென்னையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கிறார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் தனது அப்பார்ட்மெண்ட்டிற்க்கு சென்றபோது அங்கே ஆண் நபர் ஒருவர் இவரது அறையில் குளித்து கொண்டு இருக்கிறார். இதை பார்த்து குளித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுகுறித்து அப்பார்ட்மெண்ட் நிர்வாகத்திடம் கேட்டபோது விஜயலட்சுமி மூன்று மாதங்கள் வாடகை தராததால் அவர் தங்கியிருந்த அறையை வேறு ஒருவருக்கு வாடகைக்கு பெற்றுள்ளதாக கூறியுள்ளார்கள்.



இதனால் ஆவேசம் அடைந்த விஜயலட்சுமி தன்னுடைய அறையில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வெளியில் வைத்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் தன்னை சந்தித்தார், தான் இந்த அபார்ட்மென்டில் தங்க வைத்ததாகவும் அவருக்கு தெரியாமலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறியிருக்கிறா,ர் மேலும், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில் தன்னுடைய பொருட்கள் எல்லாம் வெளியில் தூக்கிப் போட்டு உள்ளதாகவும் வாடகை தரவில்லை என்றால் தன்னை அடைத்து அல்லது தன்னை தங்க வைத்த ஹரி நாடரிடம் பேச வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.



உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.




சீமானை தொடர்ந்து தற்போது ஹரி நாடாரை பஞ்சாயத்தில் இழுத்துவிட்டுள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு