16,May 2024 (Thu)
  
CH
சினிமா

இளம் நடிகருடன் ஜோடி போடும் குக் வித் கோமாளி பவித்ரா.!

தற்பொழுதெல்லாம் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்தவர் நடிகை பவித்ரா.

இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் எந்த திரைப்படங்களும் சொல்லுமளவிற்கு சினிமாவில் பிரபலத்தை தரவில்லை.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இதன் மூலம் இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இவர் மலையாளம் திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சதீஷ்க்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்னும் ஒரு இளம் நடிகரின் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ஹீரோவாக பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகர் கதிர். நடிகர் கதிருக்கு தான் பவித்ரா ஜோடியாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இத்திரைப்படத்தைப் பற்றிய இன்னும் பல தகவல் இணையதளத்தில் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின், தர்ஷா, பவித்ரா, புகழ்,பாலா என பலருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.


இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இளம் நடிகருடன் ஜோடி போடும் குக் வித் கோமாளி பவித்ரா.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு