18,May 2024 (Sat)
  
CH
சினிமா

ரசிகர்களிடம் கொதித்த யுவன்..

தனது மதம் சார்ந்த பதிவு விமர்சனத்துக்குள்ளான நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பதிவுகள் மூலமாகவே பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா.யுவன் சங்கர் ராஜாவை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர்.

குரான் வசனம் இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்த பதிவு ஒன்று நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளானது. அதாவது குரானில் கூறப்பட்டிருந்த வசனம் ஒன்றை யுவன் சங்கர் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

வெளியேறிவிடுவேன் அதனை பார்த்த ரசிகர் ஒருவர், நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்ந்ததும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால்தான். இது ஒன்றும் மத பிரச்சாரம் செய்யும் பிளாட்ஃபார்ம் அல்ல. இப்படியே போனால் நான் இந்த பேஜை விட்டு நிரந்தரமாக வெளியேறிவிடுவேன் என்று பதிவிட்டிருந்தார்.

போய்விடுங்கள் இதனை பார்த்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, அந்த ரசிகரின் பெயரை குறிப்பிட்டு வெளியேறிவிடுங்கள் என ஸ்மைலியுடன் பதிவிட்டார். இதனை பார்த்த மற்றொரு ரசிகர், கோவிட் 19க்காக உங்களுடைய பங்களிப்பு என்ன? உங்களுடைய கான்செர்ட்டுகளின் மூலம் மக்களின் பணத்தை உறிஞ்சுகிறீர்கள். உங்களால் பெரிய பாடத்தை கற்றுக்கொண்டேன். எந்த பிரபலத்துக்கும் முன்னுரிமை கொடுக்கக் கூடாது என பதிவிட்டிருந்தார்.

அனைவருக்கும் பதிலடி மேலும் மற்றொரு ரசிகர் புதிய மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நீங்கள் இன்னும் ஏன் பழைய பெயரையே பயன்படுத்துகிறீர்கள். உங்கள் பெயரை மாற்றுங்கள் என குறிப்பிட்டிருந்தார். தனது பதிவுக்கு எழுந்த எதிர்ப்புகளால் கடுப்பான யுவன் சங்கர் ராஜா அனைவருக்கும் பதிலடி கொடுத்தார்.

உங்கள் அறியாமை அதாவது, நான் உங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்தியன். நான் ஒரு தமிழன். நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை.

வெறுப்பை நிறுத்துங்கள் மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை விஷயம் கூட உங்களுக்கு புரியவில்லை என்றால் எதுவும் புரியாது. வெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள் என விளாசினார். யுவனுக்கு ஆதரவு தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவை விமர்சித்து அவரது பேஸ் புக் பக்கத்தில் கமெண்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ரசிகர்களிடம் கொதித்த யுவன்..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு