23,Nov 2024 (Sat)
  
CH
சினிமா

பொன்விழா காணும் எளிய மனிதர் அஜீத்…

உலகமெங்கும் ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார் நடிகர் அஜீத். இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உழைப்புக்கு முன்னோடியான இருக்கும் அஜீத், மே 1 உழைப்பாளர் தினத்தில் பிறந்தார் என்பது ஆச்சர்யமான விஷயம். அவரை பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்…

1993-ல் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அஜீத்.

செல்வா இயக்கிய இப்படத்தின்போது அஜீத்துக்கு தமிழ் பேச தெரியாது. இதனால் சினிமாவில் நடிப்பதில் பல சிக்கல்களை சந்தித்தார். நிறைய போராட்டங்களை கடந்துதான் சினிமாவில் சாதித்தார். முதன்முதலில் அகத்தியன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கோட்டை’ படத்தின் மூலம்தான் மாபெரும் வெற்றி கிடைத்தது.

இதையடுத்து இயக்குநர் வசந்த் இயக்கத்தில் ‘ஆசை’ படம், அஜித்தை வளர்ந்து வரும் கதாநாயகனாக அடையாளம் காட்டியது. மீண்டும் இயக்குநர் வசந்த் இயக்கும் ‘நேருக்கு நேர்’ படத்தில் விஜய்யுடன் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகியதால் அந்த கேரக்டரில் சூர்யா நடித்தார். அதன்பிறகு ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் அஜீத். தொடர்ந்து பிரசாந்துடன் ‘கல்லூரி வாசல்’, விக்ரமுடன் ‘உல்லாசம்’ என அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்தார்.


சரண் இயக்கத்தில் வெளியான ‘காதல் மன்னன்’ படம் அஜித்தை நிஜ காதல் மன்னனாக மாற்றியது. காதல் படங்களில் வரிசையாக நடித்து வந்த அஜீத், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘வாலி’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வில்லனாக கலக்கியிருந்தார். இப்படி சாப்ட் கார்னர் படங்களில் நடித்து வந்த அஜீத்துக்கு ‘அமர்க்களம்’ படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

கிசுகிசுப்புகளில் சிக்காத ஒரே நடிகராக இருந்து வரும் அஜீத், முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தீனா’ படத்தில் நடித்ததிற்கு பிறகு நிலைமையே மாறிப்போனது. இந்த படத்தின் நடித்துதான் ‘தல’ என்ற பெயரும் அஜீத்துக்கு கிடைத்தது. பாலா இயக்கத்தில் வெளியான நந்தா, நான் கடவுள் படங்களை நிராகரித்தார். இந்த இரண்டும் படத்தின் கதையும் அஜீத்துக்காக எழுதப்பட்டது. வேறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பின்னாளில் மாபெரும் வெற்றிப்பெற்றது.

ஒரு காலக்கட்டத்தில் அஜீீத் நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. அதன்பிறகு ரஜினி நடிப்பில் வெளியான ‘பில்லா’ திரைப்படத்தை அஜீத்தை வைத்து இயக்குனர் விஷ்ணு வரதன் ரீமேக் செய்தார். இரு பாகங்களாக வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. இதில் கேங்ஸ்டராக மாஸ் கெட்டப்பில் அஜீத் நடித்திருந்தார். ‘மங்காத்தா’ படத்தில் சால்ட் அண்ட் பெப்பரில் அஜீத் நடித்தது, வெறித்தனம்.

‘ஏகன்’ படத்திற்கு பிறகு மேடைகளில் பேசுவதையும், ‘அசல்’ படத்திற்கு பிறகு ஊடகங்களில் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். அஜீத்துக்கு அரசியல் பிடிக்காத விஷயம். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க தவறியல்லை. மக்களோடு மக்களாக வரிசையில் நின்று கண்டிப்பாக வாக்களித்திடுவார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிடித்த நடிகர் என்றால் அது அஜீத் தான்.

பைக், கார் ஓட்டுவது ரொம்பவே பிடித்த விஷயம். சர்வதேச அளவில் நடைபெற்ற பார்முலா போட்டிகளில் கலந்துக்கொண்ட ஒரே நடிகர் இவர்தான். இதோடு விமானம் ஓட்டுதல் , துப்பாக்கி சுடுதல் ஆகியவை அவரின் சிறந்த பொழுதுபோக்கு. அடிக்கடி நீண்ட தூரம் பைக் ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சொந்தமாக பிஎம்டபிள்யூ பைக் வைத்திருக்கும் அஜித், கார்களில் ஸ்விப்ட் காரை மட்டுமே அதிகம் பயன்படுத்துவார்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவை ஆரம்பத்தில் இருந்தாலும், பின்னாளில் அதை சுத்தமாக தவிர்த்துவிட்டார். அதன்பிறகு தனது படங்களிலும் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில்லை. சமையல் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், பிரியாணி செய்வதில் ஸ்பெசலிஸ்ட். தனது குடும்பத்தை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

இவ்வளவு புகழ்கொண்ட அஜீத், அனைவருக்கும் முன்னோடியாக இருந்து வருகிறார். அவரின் புகழை சொல்ல வார்த்தைகள் இல்லை. 50வது பிறந்தநாள் கொண்டாடும் அஜீத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ‘டாப் தமிழ்’ சினிமா…


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பொன்விழா காணும் எளிய மனிதர் அஜீத்…

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு