28,Apr 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடையட்டும்....ஏ.ஆர்.ரஹ்மான்

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி எதிர்க்கட்சியாக இருக்க போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் திமுக தனித்து 125 தொகுதிகளிலும் கூட்டணியுடன் 159 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதனை அடுத்து அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடையட்டும்’ என்று கூறி வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அவர் இதுகுறித்து தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடையட்டும்....ஏ.ஆர்.ரஹ்மான்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு