18,May 2024 (Sat)
  
CH
சினிமா

நடிகை இத்தனை கோடி வாங்கியது ஏன்?

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார்.அவருக்கு ஜோடியாக ஹீரோவாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் என்ற ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து வருண் தேஜின் ‘முகுந்தா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே.

தெலுங்கு திரையுலகுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த பூஜா ஹெக்டே, அடுத்ததாக பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்தார். ‘மொகெஞ்ச தாரோ’ என்ற கால் ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹரிதிக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே.இப்படி இந்தி, தெலுங்கு என்று பிசியாக நடித்து வரும் பூஜா சமீபத்தில் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.

தற்போது இவர் தான் தளபதி 65 படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது தென்னிந்திய மொழிகளில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது.எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக மார்க்கெட் இருக்கிறாராம் பூஜா ஹெக்டே.இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூ.2 கோடி சம்பளம் வாங்கினாராம். ஆனால், இவர் முகமூடி படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ? வெறும் 30 லட்சம் தான்.

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




நடிகை இத்தனை கோடி வாங்கியது ஏன்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு