20,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35.66 இலட்சமாக அதிகரித்துள்ளது.

தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 4 லட்சத்தை கடந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்த முதல் நாடு இந்தியா ஆகும். உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்இ இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,10,77,410 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 230168 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,72,80,844 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,29,113 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 35,66,398 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 16,25,13,339 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு