கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை ஒருவர், தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமணமான நடிகை ஒருவர் கோலிவுட்டை போன்று டோலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். அம்மணிக்கு இரண்டு மொழிகளிலும் வரவேற்பு இருப்பதால் சம்பளமும் கோடிக்கணக்கில் வாங்கி வருகிறாராம். தற்போது ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு படப்பிடிப்பு வர முடியாது என அடம்பிடிக்கிறாராம் அந்த நடிகை.
ஏனென்று கேட்டால், அம்மணிக்கு கொரோனா பயமாம். இந்த நோய் தொற்றின் தீவிரம் குறைந்த பின்னர் தான் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வேன் என சொல்லிவிட்டாராம். பாதுகாப்பாக படப்பிடிப்பை நடத்துவோம் என தயாரிப்பாளர் சொல்லியும் அந்த நடிகை கேட்கவில்லையாம். இதனால் வேறு வழியின்றி படப்பிடிப்பு முழுவதையும் ரத்து செய்து விட்டார்களாம். இதற்காக போடப்பட்ட செட் எல்லாம் வீணாகி வருகிறதே என தயாரிப்பாளர் புலம்புகிறாராம்.
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..