04,Dec 2024 (Wed)
  
CH
சினிமா

தயாரிப்பாளர் அறிக்கை டாக்டர் படத்தின் ரிலீஸ் பற்றி பேச விரும்பவில்லை

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தை ரம்ஜான் பண்டியன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், டாக்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது. 

இதையடுத்து இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் உலா வந்தன. இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள், டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு படக்குழுவினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில், டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தினமும் டாக்டர் பட அப்டேட் கேட்டு பலரும் எங்களைத் தொடர்பு கொள்கிறீர்கள். முழு படமும் முடித்து கையில் ரெடியாக உள்ள நிலையில், கொரோனா காரணமாக அதை வெளியிட முடியாமல், பல பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளோம். படம் நல்லபடி ரிலீஸ் ஆக எனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன்.

மறுபக்கம், கொரோனா இரண்டாவது அலையில் சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து கொண்டிருக்கிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





தயாரிப்பாளர் அறிக்கை டாக்டர் படத்தின் ரிலீஸ் பற்றி பேச விரும்பவில்லை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு