29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

மருத்துவ பணியாளர்கள் டாக்டர்கள், ‘குக்கூ’ பாடலுக்கு நடனம்

உலக செவிலியர் தினத்தையொட்டி, நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சென்னை டாக்டர் ரேலா ஆஸ்பத்திரி டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் ‘குக்கூ’ பாடலுக்கு நடனமாடி அசத்தினர்.

உலக செவிலியர் தினத்தையொட்டி, நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சென்னை டாக்டர் ரேலா ஆஸ்பத்திரி டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் ‘குக்கூ’ பாடலுக்கு நடனமாடி அசத்தினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ‘குக்கூ... குக்கூ...’ என்ற பாடல் வைரலாக பரவி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கோடிக்கணக்கான மக்கள் இந்த பாடலை பார்த்து ரசித்தனர். கொரோனா சூழலிலும் இந்த பாடல் பெரிதும் பேசப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கேரள போலீசார் நள்ளிரவில் சாலையில் நடனமாடினர். இந்த நடன வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேக வேகமாக பரவியது. பல இடங்களில் இந்த பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்திலும் பெண் போலீசார் ‘குக்கூ’ பாடலுக்கு நடனமாடி கவனம் ஈர்த்தனர்.

இந்தநிலையில் உலக செவிலியர் தினத்தையொட்டி, முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. நிறுவிய, சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ‘குக்கூ... குக்கூ...’ பாடலுக்கு நடனமாடி, நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

டாக்டர் ரேலா ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் டாக்டர் காவ்யா பாடிய, இந்த பாடல் வீடியோ காட்சியில், ‘குக்கூ... குக்கூ... உயிரை காக்கும் தொழிலுக்கு.... குக்கூ... குக்கூ நர்சுகள் பண்ணும் சேவைக்கு... குக்கூ... குக்கூ... எதையும் தாங்கும் மனதுக்கு குக்கூ... குக்கூ... நர்சுகள் காக்கும் உயிருக்கு....குக்கூ... குக்கூ...’, என்பன போன்ற நம்பிக்கையூட்டும் வரிகள் பின்னணி ஒலிக்க நர்சுகளை வாழ்த்தி நடனம் ஆடுகிறார்கள்.

உயிரை காக்கும் சேவையில் ஈடுபடும் நர்சுகளின் சேவையை பாராட்டும் வகையிலும், நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இந்த பாடல் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. டாக்டர் ரேலா ஆஸ்பத்திரி டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் நடனமாடும் இந்த ‘குக்கூ’ பாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் உலக செவிலியர் தினத்தையொட்டி, உயிரை காக்கும் உன்னத தொழிலை சேவையாக ஏற்று வாழ்ந்து வரும் நர்சுகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவது போலவும் இந்த வீடியோ காட்சி அமைந்துள்ளதாக பாராட்டுகள் குவிகின்றன.

இந்தநிலையில், டாக்டர் ரேலா ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி உலக செவிலியர் தினத்தில், நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மருத்துவ பணியாளர்கள் டாக்டர்கள், ‘குக்கூ’ பாடலுக்கு நடனம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு