28,Mar 2024 (Thu)
  
CH
விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6௩, 7௬ (7௫) என்ற நேர் செட்டில் டெய்லர் பிரைட்சை (அமெரிக்கா) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 3௬, 7௬ (7௫), 6-0 என்ற செட் கணக்கில் மார்டோன் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) ஆகியோரும் வெற்றிகரமாக 2-வது தடையை கடந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை 7௬ (7௨), 6௨ என்ற நேர் செட்டில் 31-ம் நிலை வீராங்கனையான ஜெஸ்சிகா பெகுலா (அமெரிக்கா) விரட்டினார். இதே போல் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு களம் திரும்பிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 4 முறை சாம்பியனுமான செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா) வீழ்ந்தார். அவரை 7௬ (8௬), 7௫ என்ற நேர் செட்டில் 24 வயதான நடியா போடோரோஸ்கா (அர்ஜென்டினா) வெளியேற்றினார். 39 வயதான செரீனாவுக்கு இது ஆயிரமாவது (851 வெற்றி, 149 தோல்வி) ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) தன்னை எதிர்த்த ஷிவ்டோவாவை (கஜகஸ்தான்) 6௪, 6௧ என்ற நேர் செட்டில் எளிதில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 2௬, 6௩, 6௪ என்ற செட் கணக்கில் அனிசிமோவாவை (அமெரிக்கா) போராடி சாய்த்தார். கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), முகுருஜா (ஸ்பெயின்), சபலென்கா (பெலாரஸ்), ஆஸ்டாபென்கோ (ஆஸ்திரியா), கோகோ காப் (அமெரிக்கா), ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோரும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





இத்தாலி ஓபன் டென்னிஸ் அதிர்ச்சி தோல்வி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு