புகழ்பெற்ற நடிகரான கமல்ஹாசன் அரசியல்வாதியாக மாறி 2018 ல் தனது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் , சமீபத்தில் முடிவடைந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் 2021 இல் முதல் முறையாக போட்டியிட்டார். கமல் ஒரு சில வித்தியாசங்களைத் தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் கட்சி மோசமாக இருந்தது. தெற்கு கோவையில் 2000 வாக்குகளுக்கு கீழ் தோல்வியடைந்தது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்விக்கு பின்னர் அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன் விலகினார்.அதற்கு முன் கமீலா நாசர் விலகியிருந்தார். இன்னும் சில நிர்வாகிகள் விலகி இருந்த நிலையில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி யுமான சந்தோஷ் பாபுவும் விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகக் கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ள அவர், கமல்ஹாசனுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.இவர் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .கட்சி தோல்விக்கு பின் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகுவதுது பலருக்கு புரியாத அதிர்ச்சியாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..