தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா சாவ்லா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பை பயன்படுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
தற்போது திருமணமாகி குழந்தை இருப்பதால் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் பூமிகா மற்ற மொழிகளில் கவனம் செலுத்தியதால் தமிழ் மொழியில் ஏகப்பட்ட படங்களில் நடிக்காமல் மற்ற மொழி படங்களில் அதிகம் நடித்தார்
. சமீபத்தில் உடல் எடையை குறைத்து சமூக வலைதளப் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களையும் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சில இயக்குநர்கள் கண்ணில் பட ஒரு இயக்குநர் பூமிகாவை அனுகி, காதல் கதை ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வேண்டும். அதிலும் முத்தக்காட்சியும் இருக்கலாம் என்று கூறி பேசியுள்ளார்.
ஆனால் அதற்கு பூமிகா வேண்டவே வேண்டாம் என்று ஸ்டிக்ட்டாக கூறியுள்ளாராம். திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் இப்படி நடித்தால் என்னுடைய பெயர் முழுவதும் அடிபடும். பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்பதால் அதனை நடிக்க தயாராக இல்லை என வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..