24,Nov 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

டொமினிகா தீவில் சிக்கிய 13,500 கோடி ரூபாய் மோசடி குற்றவாளி

இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் வங்கியொன்றில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மெகுல் சோக்ஸி டொமினிகா தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பஞ்சாப் பகுதியில் வங்கியொன்றில் ரூ.13,500 கோடி கடன் பெற்று கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவுக்கு மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் தப்பி சென்றிருந்தார்.


இவர் ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமையையும் பெற்று குடும்பத்துடன் அங்கு தப்பி சென்றிருந்தார். இந்த நிலையில், மெகுல் சோக்சி அந்த நாட்டிலிருந்து மீண்டும் படகு மூலம் கியூபாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற போது டொமினிகா தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஆன்டிகுவா பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.


அதாவது படகு மூலம் கியூபாவுக்கு தப்பிச்செல்ல முயன்றபோது கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிகா நாட்டில் அவரை உள்ளூர் பொலிஸார் மடக்கி பிடித்ததாக கூறப்படுகின்றது.


தற்போது டொமினிகா பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகுல் சோக்ஸியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 




டொமினிகா தீவில் சிக்கிய 13,500 கோடி ரூபாய் மோசடி குற்றவாளி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு