இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக விளங்குபவர், இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார்.
அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள Beast படத்திலும் அனிருத் இசையமைக்க உள்ளார்.
மேலும் அனிருத் இதற்கு முன் கத்தி, மாஸ்டர் உள்ளிட்ட விஜய் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த ட்விட்டர் Space-ல் அனிருத் கலந்து கொண்டு தளபதி விஜய் குறித்து பல விஷயங்களை கூறினார்.
அப்போது அனிருத் கில்லி படத்தில் வரும் அர்ஜுனரு வில்லு பாடல்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தான் பயணம் செய்யும் போதெல்லாம் அந்த பாடலை தான் விரும்பி கேட்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மாஸ்டர் படத்தில் அனிருத் கபடி பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார், அது பெரியளவில் வரவேற்பை பெற்றது.













0 Comments
No Comments Here ..