13,Jul 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி சி ஆர் பரிசோதனையில் ஜேர்மன் நிறுவனம் - கட்டண விபரமும் வெளிவந்தது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஜேர்மன் நாட்டு நிறுவனமொன்று பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

அமைச்சரவைக்கு இந்த யோசனையை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்த நிலையிலேயே அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆய்வுகூடத்தை கட்டுவதற்காக விமான நிலையத்திற்குச் சொந்தமான பகுதியில் ஒன்றரை ஏக்கர் பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 10000 டொலர் மாதாந்த வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, பி.சி.ஆர் மற்றும் மாதிரிகளைப் பெற்று ஆய்வுகூட வசதியை அளிப்பதற்காக பயணிகளிடமிருந்து தலா 40 டொலர்களை அறவிட குறித்த நிறுவனம் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி சி ஆர் பரிசோதனையில் ஜேர்மன் நிறுவனம் - கட்டண விபரமும் வெளிவந்தது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Actress

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு