நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித், வினோத், போனிகபூர் மூவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. இந்த படத்தின் அப்டேட்டிற்காக தவமாய் தவமிருந்து காத்திருந்த ரசிகர்களுக்காக, கடந்த சில வாரங்களுக்கு முன்பாக படத்தின் ஒருசில போஸ்டர்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்தனர் படக்குழுவினர். இந்நிலையில்
வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று இரவு ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் வலிமை படம் தொடர்பான அப்டேட் கேட்டு அனைவரையும் நச்சரித்து வந்தனர் அஜித் ரசிகர்கள்.
அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியாக இருந்த வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரசிகர்களும், ஒருசில திரை பிரபலங்களும் கூட வலிமை அப்டேட் கேட்க ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து அண்மையில் வலிமை படத்தின் மிரட்டலான போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று இரவு 10 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள 'நாங்க வேற மாதிரி' பாடல் இன்று இரவு வெளியாக உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடி இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..