20,Apr 2024 (Sat)
  
CH
விளையாட்டு

வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து தோனி பெயர் நீக்கம்

இந்திய அணிக்காகவோ, உள்நாட்டு கிரிக்கெட்டிற்காக தன் மாநில அணிக்கோ எதிலும், எந்த ஒரு கிரிக்கெட்டிலும் பங்கேற்காமல் வாளாவிருந்து வரும் மகேந்திர சிங் தோனி இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் வாழ்வு தோனிக்கு ஏறக்குறைய முடிவுக்கு வரப்போகிறது என்பது தெரிகிறது.

உலகக்கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் தோனி ஆடியதோடு சரி. அதன் பிறகு ஓய்வு அறிவிக்காமலேயே நீண்டகாலம் கிரிக்கெட்டுக்கு ஓய்வளித்து வந்தார்.

கடந்த ஆண்டு புஜாரா, ரஹானே, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோருடன் அவர் ஏ-பிரிவு வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்தார். இந்நிலையில் தோனியின் பெயர் நீக்கம் அவர் ஏறக்குறைய ஓய்வு பெற்றதைத்தான் அறிவுறுத்துகிறது, ஓய்வும் அறிவிக்காமல், விளையாடவும் இல்லாமல் அணித்தேர்வுக்குழுவுக்கும் நிர்வாகத்திற்கும் போக்குக் காட்டி வந்தார் தோனி. இது பல ஊகங்களுக்குத்தான் வழிவகுத்ததே தவிர வேறு எந்த உண்மையையும் கொண்டு வரவில்லை.


இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் ஏ பிளஸ்-பிரிவில் ரோஹித் சர்மா நீடிக்கிறார். இவருடன் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ+ பிரிவில் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர். இது ரூ.7 கோடிக்கான ஒப்பந்தப்பிரிவு ஆகும்.

அதே போல் ஏ பிரிவில் கடந்த ஆண்டு போலவே 11 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். காயத்தினால் அதிக போட்டிகளை ஆட முடியாமல் போன விருத்திமான் சஹா சி பிரிவிலிருந்து பி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் பிரிதிவி ஷா, விஜய் சங்கர் ஆகியோரும் இடம்பெறவில்லை.

ஏ+ பிரிவு: கோலி, பும்ரா, ரோஹித் சர்மா (ரூ.7 கோடி)

ஏ-பிரிவு (ரூ.5 கோடி) : அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர், புஜாரா, ரஹானே, தவண், ஷமி, இஷாந்த்சர்மா, குல்தீப், ரிஷப் பந்த், ராகுல்

பி-பிரிவு: (ரூ.3 கோடி): உமேஷ், சாஹல், பாண்டியா, சஹா, மயங்க் அகர்வால்

சி-பிரிவு (ரூ.1 கோடி): கேதார் ஜாதவ், பாண்டே, ஹனுமா விஹாரி, சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், அய்யர், வாசிங்டன் சுந்தர்.




வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து தோனி பெயர் நீக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு