தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். தனுஷ் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ. 6.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.













0 Comments
No Comments Here ..