16,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

நிர்பயா கொலை தொடர்பான வழக்கில் நால்வரையும் தூக்கிலிட உச்ச நீதிமன்றம் இறுதித் திகதி அறிவிப்பு

மருத்துவ மாணவி நிர்பயாவின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நால்வரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தூக்கிலிடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முகேஷ் சிங் கருணை மனுவினை தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நிர்பயா என்ற 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட குழுவினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பின்னர் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதன்போது குறித்த மாணவிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மற்றுமொருவர் விடுதலை செய்யப்பட்டார். ஏனைய நால்வருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





நிர்பயா கொலை தொடர்பான வழக்கில் நால்வரையும் தூக்கிலிட உச்ச நீதிமன்றம் இறுதித் திகதி அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு