28,Mar 2024 (Thu)
  
CH
விளையாட்டு

தென்னாபிரிக்கா - இங்கிலாந்து மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற உள்ளது.

இந்தப் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்க அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 499 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பாக, பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) 120 ஓட்டங்களையும், ஒல்லீ போப் (Ollie Pope) 135 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

இதனை அடுத்து, தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

தென்னாபிரிக்க அணி சார்பில், குயிண்டன் டீ கொக் (Quinton de Kock) 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

இதனை அடுத்து, ஃபோலோ ஒன் முறையில் தற்போது தென்னாபிரிக்க அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 




தென்னாபிரிக்கா - இங்கிலாந்து மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு