நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக, பத்து விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த குரல் பதிவுகளின் பிரதிகள் கிடைக்கப் பெற்றதும் அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என, காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியகட்சகர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்தக் குரல் பதிவுகளின் பிரதியைபெற்று, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியகட்சகர் ஜாலிய சேனாரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.
0 Comments
No Comments Here ..