21,Nov 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

தென்காசி மாவட்ட கிராம பகுதிகளில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்

புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு திடீரென அறிவித்தது. மேலும் புதிதாக 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக புதிய ரூ.500, ரூ.200, ரூ.100 மற்றும் ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகளும் விதவிதமான வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள ரூபாய் நோட்டுகளை தடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்கத்திலேயே புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாத அளவிற்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் புதிய ரூபாய் நோட்டுகளில் புகுத்தப்பட்டது.

ஆனால் தற்போது புதிய ரூபாய் நோட்டுகளிலும் கள்ள நோட்டுகள் வர தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரண்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள ஒரு பங்க்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ஆனால் அதை வாங்கிய பங்க் ஊழியர் அந்த நோட்டு வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்தார். உடனே அந்த நோட்டை பரிசோதித்தவர் அதனை கள்ளநோட்டு என்பதை கண்டுபிடித்தார்.

இதனால் 200 ரூபாய் நோட்டை அந்த வாலிபரிடமே திருப்பிகொடுத்து, இது கள்ள ரூபாய் நோட்டு என்றார். அதனைக்கேட்டு பெட்ரோல் போட வந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். பின்பு அவர் கொடுத்த ரூபாய் நோட்டை வாங்கி கூர்ந்து பார்த்தபோது கள்ள ரூபாய் நோட்டுதான் என்பதை அறிந்து, பெட்ரோல் போட்டதற்கு வேறு ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்.

அந்த 200 ரூபாய் நோட்டு பார்ப்பதற்கு நல்ல ரூபாய் நோட்டு போலவே இருந்தது. நல்ல ரூபாய் நோட்டுகளில் உள்ளது போலவே எழுத்துகள், படங்கள் என அனைத்து அம்சங்களுடன் இருந்தது. சாதாரணமாக பார்த்தால் எளிதில் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒரிஜினல் ரூபாய் நோட்டு போலவே அச்சடிக்கப்பட்டிருந்தது.

கிராமங்களை குறி வைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை மர்ம கும்பல் புழக்கத்தில் விட்டுவரலாம் என்று கருதப்படுகிறது. எனவே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




தென்காசி மாவட்ட கிராம பகுதிகளில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு